4156. புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
  ஒள்வான் நிலந்தே டும்ஒரு வர்க்கிடமாந்
தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவுண் டுவண்டார் விடைவாயே.     9

     9. பொ-ரை: திருமால் பிரமன் ஆகியோர், அடியையும்
முடியையும் நிலத்திலும் வானத்திலும் சென்று தேடுமாறு, உயர்ந்து
நின்ற ஒப்பற்ற சிவபெருமானுக்குரிய இடம், தெளிந்த நீரோடைகளில்
பூத்த செங்கழுநீர் மலர்களில் உள்ள தேனை, வாய்திறந்து உண்டு
வண்டுகள் பாடும் திருவிடைவாய் என்பர்.