4157. |
உடைஏ
துமிலார் துவராடை யுடுப்போர் |
|
கிடையா
நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வே வமூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே. 10 |
10.
பொ-ரை: ஆடையின்றியும் துவராடை உடுத்தும் திரியும்
சமண புத்தர்களால் அறிய முடியாத, மேலான சைவநெறிக்குரிய
அப்பெருமான் விரும்பி உறையும் இடம், வானில் இயங்கிய
திரிபுரங்களை அழித்து அவற்றின் தலைவர்களாய மூன்று
அசுரர்ளுக்கு அருள் செய்த விடைக் கொடியுடையவனாகிய
சிவபெருமானது அழகிய திருவிடைவாய் என்பர்.
|