4158.
|
ஆறும்
மதியும் பொதிவே ணியானூரா |
|
மாறில்
பெருஞ்செல் வம்மலி விடைவாயை
நாறும் பொழிற்கா ழியர்ஞா னசம்பந்தன்
கூறுந் தமிழ்வல் லவர்குற் றமற்றோரே. 11 |
11.
பொ-ரை: கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடிய
சடைமுடியை உடைய சிவபெருமானது ஊராகிய செல்வம் நிறைந்த
திருவிடைவாயை, பொழில் சூழ்ந்த காழியில் தோன்றிய
ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்தமிழ் மாலையை ஓதி வழிபட
வல்லவர் குற்றமற்றவராவர்.
திருஞானசம்பந்த
சுவாமிகள் தேவாரம் முற்றிற்று.
|