| தொடக்கம் |
|
|
|
|
4.52 திருஆரூர் திருநேரிசை |
| 498 | படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால் கெடுவது இம் மனிதர் வாழ்க்கை; காண் தொறும் கேதுகின்றேன்; முடுகுவர், இருந்து உள் ஐவர் மூர்க்கரே; இவர்களோடும் அடியனேன் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 499 | புழுப் பெய்த பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடி ஒழுக்கு அறா ஒன்பது(வ்) வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை; சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய, அழிப்பனாய் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 500 | பஞ்சின் மெல் அடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று நெஞ்சில் நோய் பலவும் செய்து, நினையினும் நினைய ஒட்டார் நஞ்சு அணி மிடற்றினானே! நாதனே! நம்பனே! நான் அஞ்சினேற்கு, “அஞ்சல்!” என்னீர்-ஆரூர் மூலட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 501 | கெண்டை அம் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக் குண்டராய்த் திரி தந்து ஐவர் குலைத்து இடர்க் குழியில் நூக்கக் கண்டு நான் தரிக்ககில்லேன்; காத்துக் கொள்! கறை சேர் கண்டா! அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 502 | தாழ் குழல் இன் சொல் நல்லார் தங்களைத் தஞ்சம் என்று(வ்) ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன்? எந்தை பெம்மான்! வாழ்வ தேல் அரிது போலும்; வைகலும் ஐவர் வந்து(வ்) ஆழ் குழிப் படுக்க ஆற்றேன்-ஆரூர் மூலட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 503 | மாற்றம் ஒன்று அருள கில்லீர்; மதி இலேன் விதி இலாமை சீற்றமும் தீர்த்தல் செய்யீர்; சிக்கனவு உடையர் ஆகிக் கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய, ஆற்றவும் கில்லேன், நாயேன் ஆரூர் மூலட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 504 | உயிர் நிலை உடம்பே காலா, உள்ளமே தாழி ஆக, துயரமே ஏற்றம் ஆக, துன்பக் கோல் அதனைப் பற்றி, பயிர் தனைச் சுழிய விட்டு, பாழ்க்கு நீர் இறைத்து, மிக்க அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 505 | கற்ற தேல் ஒன்றும் இல்லை; காரிகையாரோடு ஆடிப் பெற்ற தேல் பெரிதும் துன்பம்; பேதையேன் பிழைப்பினாலே முற்றினால் ஐவர் வந்து முறை முறை துயரம் செய்ய அற்று நான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 506 | பத்தனாய் வாழ மாட்டேன், பாவியேன்; பரவி வந்து சித்தத்துள் ஐவர் தீய செய் வினை பலவும் செய்ய, மத்து உறு தயிரே போல மறுகும், என் உள்ளம் தானும் அத்தனே! அமரர்கோவே! ஆரூர் மூலட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 507 | தடக்கை நால்-ஐந்தும் கொண்டு தட வரை தன்னைப் பற்றி எடுத்தவன் பேர்க்க, ஓடி இரிந்தன, பூதம் எல்லாம்; முடித் தலை பத்தும் தோளும் முறி தர இறையே ஊன்றி அடர்த்து, அருள் செய்தது என்னே? ஆரூர் மூலட்டனீரே! |
|
உரை
|
| |
|
|