|
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! பொங்கி நின்று எழுந்த கடலினின்றும் விளைந்த ஆலகாலவிடத்தை விழுங்கி உண்ட ஒரு தெய்வம் இத்தெய்வத்தையன்றி வேறு உண்டோ சொல்வாயாக! அச்சோற்றுத்துறையர்க்கு மனம் தாழ்ந்து என்றும்தங்கி நீ பணிசெய்வாயாக. கு-ரை: நஞ்சினைப் பங்கியுண்டதோர் தெய்வமுண்டோ சொலாய் - ஏனையோர் யாவரும் நன்மை தீமை கலந்து பங்கிடுபவராகிய எமது பெருமான் தீமையாகிய நஞ்சைத் தமக்கு வைத்தும், நல்லதாகிய அமிர்தத்தைத் தேவர்க்குவைத்தும் அந்த நஞ்சைப் பங்கிட்டு உண்டதுபோல வேறு தெய்வமுண்டோ? என்க. தொங்கி - துவங்கி. தங்கி - ஒருநெறிப்பட்டு. |