|
பொ-ரை: புற்றில் ஆடும் இயல்புடைய பாம்பினோடு கங்கையும், பிறையும் பொருந்திய செஞ்சடையுடைய தேவர் தலைவன் திருப்பதியாகியதும், சுற்றிலும் மாடங்கள் சூழ்ந்ததுமாகிய திருவாஞ்சியத்தைப்பற்றிப் பாடுபவர்களுக்குப் பாவங்கள் இல்லை. கு-ரை: ஆடரவு - ஆடுகின்ற பாம்பு. ஆடரவு - வினைத்தொகை; காலம் மூன்றிற்கும் பொது. புனல் - கங்கை. தெற்றும் - பொருந்திய. பற்றி - அடைந்து. |