| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 94 - 6 |  | 
			
			| ஆதி யானை அமரர் தொழப்படும் நீதி யானை நியம நெறிகளை
 ஓதி யானை உணர்தற் கரியதோர்
 சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.
 |  |  
			|  | 6 |  
			|  | பொ-ரை: முதல்வனும், தேவர்களால் தொழப்படும் நீதியானவனும், நியமயெறிகளை ஓதியவனும், உணர்தற்கு அரியதாகிய ஓப்பற்ற சோதியானும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக. கு-ரை: ஆதியானை -முதலில் தோன்றியவனை. நியமம் - செய்வன தவிர்வனவாய வரையறை. நெறி - நூல்வழி.
 |  
			|  |  |