| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 98 - 10 |  | 
			
			| வெறுத்தா னைம்புல னும்பிர மன்தலை அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக்
 கறுத்தா னைக்கா லினில்விர லொன்றினால்
 ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
 |  |  
			|  | 10 |  
			|  | பொ-ரை: ஐம்புலன்களை வெறுத்தவனும், பிரமன் தலையினை அறுத்தவனும், இராவணன் திருக்கயிலாயத்தின் மேற்சினந்தபோது காலினில் திருவிரல் ஒன்றினால் ஒறுத்தவனும் ஆகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது. கு-ரை: ஐம்புலனும் வெறுத்தான் என்க. கறுத்தானை - சினந்தவனாகிய இராவணனை. ஒறுத்தானை - தண்டித்தவனை.
 |  
			|  |  |