|
பாடல் எண் :1129 | தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல் ஏந்தி யெல்லியு ளாடு மிறைவனார் காய்ந்து காமனை நோக்கின கண்ணினார் ஆய்ந்த நான்மறை யோதுமா ரூரரே. |
| 8 | பொ-ரை: பிறைத் திங்கள் விளங்கும் சடையினரும், கனலைக் கரத்தேந்தி நள்ளிருளில் நட்டம் ஆடும் இறைவரும், காமனைச் சினந்து நோக்கிய கண்ணினரும், ஆராய்ந்த நான்மறைகளால் ஓதப்பெறும் திருவாரூர்ப் பெருமானேயாவர். கு-ரை: தேய்ந்த திங்கள் - தக்கன் மகளிர்களிடம் காட்டிய ஒருதலைப் பக்கமான அன்பால் அவன் சாபமிட அதனால் ஒவ்வொருகலையாகத் தேய்ந்து குறைந்ததால் ஒரு கலையான சந்திரன். கமழ் - விளங்குகின்ற. எல்லி - சர்வசங்காரகாலமாகிய நள்ளிரவு. காய்ந்து - சினந்து. ஆய்ந்த - அறிஞர்கள் நுணுகிக் கற்கும். |
|