|  |  | பாடல் எண் :1188 |  | | எடுத்த வெல்கொடி யேறுடை யான்தமர் உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
 கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
 விடுத்துப் போவது வீழி மிழலைக்கே.
 | 
 |  | 5 |  | பொ-ரை: உயர்த்துப் பிடித்த இடபக்கொடியையுடைய சிவபிரானின் அடியவர்கள், கோவணமே உடுப்பது; பிச்சை உணவே உண்பது; கீழ்நின்ற வல்வினைகளையே கெடுப்பது; பந்த பாசங்களை விடுத்துப் போவது வீழிமிழலைக்கே. கு-ரை: எடுத்த - தூக்கிய. வெல்கொடி - வென்ற (மேம்பட்ட) கொடி தமர் - சுற்றமாகிய அடியார். உண்பது பிச்சை - உண்ணும் உணவு பிச்சையாகக்கொண்டது. கீழ்நின்ற - தாழ நின்ற; தாழ்தற்குக் காரணமாக நின்ற தீயவினைகள். விடுத்துப் போவது - உலக பந்தபாசங்களை நீங்கிச் சென்று சேரும் இடம்.
 | 
 |