|
பாடல் எண் :1190 | தீரன் தீத்தர ளன்சடைத் தங்கிய நீர னாடிய நீற்றன்வண் டார்கொன்றைத் தாரன் மாலையன் தண்நறுங் கண்ணியன் வீரன் வீழி மிழலை விகிர்தனே. |
| 7 | பொ-ரை: அறிஞனும், தீத்திரளைக் கையிற்கொண்டாடுபவனும், சடைத் தங்கிய கங்கையனும், ஆடிய திருநீற்றனும், வண்டார்ந்த கொன்றைத்தாரும், குளிர்ந்து மணக்கும் கண்ணியும் மாலையும் உடையவனும், புலன்களை வென்று விளங்கும் வீரனும் வீழிமிழலையிலுள்ள விகிர்தனே. கு-ரை: தீரன்-அறிஞன். தீத்திரளன் - நெருப்புத் திரள் போன்ற செம்மேனியன் எனலுமாம். நீரன் - கங்கையை அணிந்தவன். ஆடிய நீற்றன் - உடலெங்கும் நீறுபூசியவன், கொன்றையாலாகிய தாரும், மாலையும், கண்ணியும் அணிந்தவன். "கண்ணி கார் நறுங்கொன்றை" (புறநானூறு - கடவுள்வாழ்த்து.) |
|