|  |  | பாடல் எண் :1207 |  | | கொன்றை மாலையுங் கூவிள மத்தமும் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்
 என்று மெந்தை பிரானிடை மருதினை
 நன்று கைதொழு வார்வினை நாசமே.
 | 
 |  | 3 |  | பொ-ரை: கொன்றை மாலையும், கூவிளமும், ஊமத்தமலரும் ஒருங்கு சென்று சேரும்படியாகத் திகழ்கின்ற சடையில் வைத்தவனாகிய இடைமருதூர் உறையும் எந்தையினை என்றும் நன்றுறக்கைதொழுவார் வினைகள் நாசமாகும். கு-ரை: கொன்றைமாலையும் கூவிளமும் மத்தமும் திகழ்சடை சென்றுசேர வைத்தவன் எனினும் அமையும். என்றும்  - நாடொறும். நன்று கைதொழுவார் - நல்ல முறையில் கையால் தொழுவார்.
 | 
 |