|
| பாடல் எண் :1208 | இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும் எம்மை யாளு மிடைமரு தன்கழல் செம்மை யேதொழு வார்வினை சிந்துமே. |
| | 4 | பொ-ரை: எம்மையாளும் இடைமருதூர் உறையும் இறைவன் கழலைச் செம்மையாகத் தொழுவார் வினை சிந்தும். அத்தொழுகை இம்மையில் வானவர் செல்வம் விளைத்திடும்; அப்பிறப்பில் பிறவித்துயர் இல்லாவகையில் நீங்கும். கு-ரை: இம்மை - இப்பிறப்பிலேயே. வானவர் செல்வம் - சுவர்க்கபோகம். விளைத்திடும் - உண்டாக்கும். அம்மையே - இப்பிறப்பின் பின் எய்தும் நிலையில். பிறவித்துயர் - பிறவித்துன்பம். நீத்திடும் - நீக்கும். ஆளும் - ஆட்கொள்ளும். செம்மையே - செவ்வியமுறையில். |
|