|  |  | பாடல் எண் :1211 |  | | விண்ணு ளாரும் விரும்பப் படுபவர் மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்
 எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
 நண்ணி னாரைநண் ணாவினை நாசமே.
 | 
 |  | 7 |  | பொ-ரை: விண்ணிலுள்ள தேவரான் விரும்பப்படுபவரும், மண்ணினுள்ள மனிதரான் மதிக்கப்படுபவரும் ஆகிய இறைவர்க்குரிய பொழில் சூழ்ந்த திரு இடைமருதூரை எண்ணி நண்ணியவரை வினையினால் வரும் கேடுகள் நண்ணமாட்டா. கு-ரை: விரும்பப்படுபவர் - விரும்பி வழிபடப்படுபவர். மதிக்கப்படுபவர்- மதித்துப்போற்றப்படுபவர்.(விண்ணவர் முதல்வனை உணர்ந்துளார் ஆதலின் விரும்புவர். மண்ணவர் கற்றபின்னன்றி உணரார் ஆகலின் மதித்து உணர்ந்து வழிபடுவர்.)
 எண்ணினார்-எண்ணத்தை இடங்கொண்ட முதல்வன், அல்லது அடியார் கருத்தில் ஆர்ந்த இடைமருது எனக் கூட்டப்படும்.
 | 
 |