பாடல் எண் :1212
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை மருதினி லீசனைச்
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே.

8
பொ-ரை: திருநீறு பூசும் விகிர்தரும், நறுமண மாலைகள் சூடும் தலைவரும், என் தந்தை போல்வாருமாகிய திருவிடைமருதூர் ஈசனைச் சிந்தையால் நினைப்பவர்களது வினைகள் தேயும்.
கு-ரை: வெந்த வெண்பொடி-தமது அருளொளியால் பொருள் அனைத்தும் வெந்து நீறாக(மாயா சத்தி ரூபமாக) வந்த வெண்பொடி கந்தம்-வாசனை. கருத்தனார்-கருத்தின்கண் விளங்குபவன் எனினும் பொருந்தும்.