|  |  | பாடல் எண் :1234 |  | | வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார் கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
 எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
 அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே.
 | 
 |  | 2 |  | பொ-ரை: வெண்ணியாகிய பழைய நகரத்தை மேவியவரும், வெண்திங்களைச் சூடியவரும், கொன்றைக் கண்ணியை உடைய கொத்தாக உள்ள சடையுடையவரும், கபாலத்தைக் கையில் ஏந்திய வரும், ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்தேனுக்கு அவர் நினைவு என் நாவினில் அண்ணித்து அமுதாக ஊறும். கு-ரை: தொல்நகர் - மிகப்பழைய நகர். மேய - எழுந்தருளிய. திங்களார் - பிறையணிந்தவர். கண்ணித்தொத்த - கொன்றைக் கண்ணி அணிந்த கொத்தாகிய. கபாலியார் - பிரமகபாலமேந்தியவர். தம்மை - அப்பெருமான்தமை. அண்ணித்திட்டு - இனித்து. நேற்றுக் கண்ட காட்சியை நினைந்திருந்த எனக்கு நாவில் அமுது அண்ணித்து ஊறும் என முடிக்க. என் நாவுக்கு - உருபு மயக்கம்.
 | 
 |