|  |  | பாடல் எண் :1288 |  | | ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல் ஏதா னும்மினி தாகும் மியமுனை
 சேதா ஏறுபடை யானமர்ந் தவிடம்
 கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.
 | 
 |  | 4 |  | பொ-ரை: ஓதாதே உணர்ந்த முதல்வன் திறத்தை எவ்வளவேனும் கூறினால் இனிதாகும்; யமுனையும் கோதாவிரியும் தீர்த்தங்களாகப் பொருந்திய குடமூக்கே சிவந்த ஆனேறுடையானாகிய சிவபிரான் உறையும் இடம். கு-ரை: ஓதாநாவன் - ஏனையர்போல நாவால் ஓதாது எல்லாம் உணர்ந்தவன் இயல்பாகவே இயற்கையுணர்வினன். "கல்லாமே கலை ஞானம் கற்பித்தானை" பிறரைப் புகழாத நாவன் எனலுமாம். திறத்தை - பெருமையின் வகைகளை. உரைத்திரேல் - உரைப்பீரேயானால். ஏதானும் - இனிய அல்லவும்; சிறிதளவேனும் ஏதாக இருந்தாலும் எனலுமாம். இனிதாகும் - தீமையும் நன்மை விளைக்கும். இயமுனை, யகரம் மொழிக்கு முதலில் வாராமை கருதி இயமுனை என்றாயது. இய முனை - யமுனை நதி. ஏறுடையான் அமர்ந்த இடம் யமுனை கோதாவிரி உறையும் குடமூக்கில் என்க. சேதா ஏறு - பசுவினமாகிய எருது; ஆனேறு.
 | 
 |