|  |  | பாடல் எண் :1351 |  | | விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
 விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
 அரும்பின் வண்ணமு மாவரை யாறரே.
 | 
 |  | 7 |  | பொ-ரை	: 	ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் எல்லோரும் விரும்பும் இயல்பும் வேதத்தின் இயல்பும், கரும்பினையொத்த இனிய மொழியையுடைய உமையம்மையார் இயல்பும், தம்மை விரும்பும் மெய்யடியார்களின் வினைகளைத் தீர்த்திடும் இயல்பும், அரும்பின் இயல்பும் உடையராவர். கு-ரை	:  விரும்பும் வண்ணம் - மெய்யன்பர் விரும்பும் வடிவங்கள். வேதத்தின் வண்ணம் - வேதங்களை வெளிப்படுத்தும் தன்மை. வேதவடிவம் எனலுமாம். இன்மொழிக் காரிகை - பார்வதி. விரும்புவார் - தன்னை நேசிப்பார்.
 வினைதீர்த்திடும் வண்ணம் - காரிகை வடிவம் கொண்டிருப்பதுவினை தீர்த்தற்பொருட்டு என்க. அரும்பின் வண்ணம் - மணத்தை உள்ளடக்கிய அரும்பின் தன்மை.
 | 
 |