|  |  | பாடல் எண் :1354 |  | | எடுத்த வாளரக் கன்திறல் வண்ணமும் இடர்கள் போர்பெரி தாகிய வண்ணமும்
 கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும்
 அடுத்த வண்ணமு மாவரை யாறரே.
 | 
 |  | 10 |  | பொ-ரை:  ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணன் ஆற்றல், துன்பங்கள் போற் பெரிதாகுமாறு செய்தருளிய இயல்பும், மிகுந்த தன் கைநரம்புகளையே யாழாக்கி அவன் இசைத்தவண்ணம் கண்டு அவனுக்கு அருளாளராக அடுத்த வண்ணமும் உடையவர் ஆவர். கு-ரை:  திறல் - வலிமை. இராவணன் தன் வலியால் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட தன்மை. இடர்கள்போல் பெரிதாகிய - அவனுடைய துன்பம்போல மலை எடுக்கமுடியாத பருமனாய் ஆகிய தன்மை. கடுத்த - விரைந்து தன் உடலில் பிய்த்த. அடுத்த - அவனு்கு அருள்செய்யும் குறிப்புப் பொருந்திய.
 | 
 |