|  |  | பாடல் எண் :1359 |  | | கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன் பருகு பாலமு தேயெனும் பண்பினன்
 அருகு சென்றில ளாவடு தண்டுறை
 ஒருவ னென்னை யுடையகோ வென்னுமே.
 | 
 |  | 5 |  | பொ-ரை:  இப்பெண், கருத்த கண்டத்தை உடையவனும், கதிர்காய்கின்ற ஒளிவடிவினனும், பருகுதற்கினிய பால் அமுது என்று கூறத்தக்க பண்பை உடையவனுமாகிய அப்பெருமான் அருகிற் சென்றனள். அல்லளாயினும், அவன்பாற்கொண்ட காதல் மிகுதியால் "என்னை உடையவன் திருஆவடுதண்டுறையில் உறையும் தலைவனே" என்று கூறும் இயல்பினள். கு-ரை:  கருகு - கருகிய. காய் - எரிக்கின்ற. கதிர் - கிரணங்களை உடைய. பருகு - பருகத்தக்கதாகிய. பாலமுதேயெனும் பண்பினன் - பாலும் அமுதமும் ஒத்த பண்பையுடையவன். அருகு சென்றிலள் - அவன் அருகிற்சென்று காணவுமில்லாதாள் ஒருத்தி. என்னையுடைய கோ - என்னை மனைவியாக உடைய தலைவன். என்னும் - என்று சொல்லிக்கொண்டிருப்பாள்.
 | 
 |