|
பாடல் எண் :1374 | தொண்டு பாடியுந் தூமலர் தூவியும் இண்டை கட்டி யிணையடி யேத்தியும் பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே. |
| 10 | பொ-ரை: திருப்பராய்த்துறைத் தலத்து எழுந்தருளியிருப்பவரும், பாண்டரங்கக் கூத்துடையவரும் ஆகிய இறைவர்க்குற்ற தொண்டுகளைப்பற்றிப் பாடியும், அப்பெருமான் இணையடிகளில் இண்டைமாலை சாத்தியும், தூமலர்கள் தூவியும், கண்டும், உள்ளத்திற் கொண்டும் அடியேன் உய்ந்து போவன். கு-ரை: தொண்டு பாடி - அடிமையாம் தன்மையை விரித்துப்பாடி இண்டை - தலை மாலை. பண்டரங்கர் - பண்டரங்கம் என்னும் திருக்கூத்தாடுபவர். இறைவனாடிய திருக்கூத்துக்களில் இதுவும் ஒன்று (கலித்தொகை - கடவுள்வாழ்த்து ). பராய்த்துறைப் பாங்கர். |
|