|
| பாடல் எண் :1387 | ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப் பார்த்த னோடு படைதொடு மாகிலும் பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த் தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
| | 2 | பொ-ரை: தோல் உடையினை ஆர்த்துக்கட்டி ஒரு வேடவடிவம் கொண்டு அருச்சுனனோடு படைக்கலந் தொடுக்கு மாயினும், பூத்த மலர்கள் நிறைந்த நீள்பொழில்களை உடைய பூந்துருத்தி நகரத்துத் தீர்த்தவடிவாய் உள்ள பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம். கு-ரை: தோலுடை ஆர்த்துக்கட்டி - புலித்தோலை இடையிலே பொருத்திக் கட்டி. பார்த்தனோடு - அர்ச்சுனனோடு. படை தொடும் - கணைதொடுத்துப் போர்புரிவான். தீர்த்தன் - புனிதன். |
|