|
| பாடல் எண் :1399 | ஆதியா னண்ட வாணர்க் கருள்நல்கு நீதி யானென்றும் நின்மல மேயென்றும் சோதி யானென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. |
| | 4 | பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! முதல்வனும் தேவர்களுக்கு அருள்நல்கும் நீதியனும், நின்மலனும், சோதியனும் ஆகிய சோற்றுத்துறைப் பெருமானுக்கு வேறொன்றும் வாளாவாதித்துக் காலம் போக்காது, பணிசெய்வாயாக. கு-ரை: அண்டவாணர் - மேலுலகவாசிகளாகிய தேவர் முதலியோர். நீதியான் - நீதிவடிவினன். நின்மலன் - மலமற்றவன். வாதியாய் - பரமன் புகழ்களையே பேசுபவனாய். |
|