|  |  | பாடல் எண் :1406 |  | | வாழ்ந்த வன்வலி வாளரக் கன்றனை ஆழ்ந்து போயல றவ்விர லூன்றினான்
 சூழ்ந்த பாரிடஞ் சோற்றுத் துறையர்க்குத்
 தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே.
 | 
 |  | 11 |  | பொ-ரை:  அறியாமையை உடைய நெஞ்சமே! ஆற்றலோடு வாழ்ந்தவனாகிய இராவணன் ஆழ்ந்துபோய் அலறுமாறு விரலால் ஊன்றினவனாகிய பூதப்படை சூழ்ந்த சோற்றுத்துறைப் பெருமானுக்கு மனமொழிமெய்களாற்றாழ்ந்து பணிசெய்வாயாக. கு-ரை:  வாழ்ந்தவன் - உலகம் புகழ வாழ்ந்தவன். ஆழ்ந்து போய் அலற - கயிலையின்கீழ் ஆழப்பதிந்து அழ. பாரிடம் சூழ்ந்த - பூதகணங்கள் சூழ்ந்த; சோற்றுத்துறை என்க. தாழ்ந்து - வணங்கி.
 | 
 |