|
பாடல் எண் :1421 | நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர் கோல முண்ட குணத்தால் நிறைந்ததோர் பாலு முண்டு பழனன்பா லென்னிடை மாலு முண்டிறை யென்றன் மனத்துளே. |
| 5 | பொ-ரை: நேர்ந்ததாகிய கோலமாக நஞ்சினை உண்ட குணத்தால் நிறைந்த நீலகண்டனும், பழனத்தலத்தின் கண் உள்ள இறைவனும் ஆகிய பெருமானிடத்து என்றன் மனத்துள் சிறிது மயக்கம் உளதாகின்றது. கு-ரை: நீலம் - நீலநிறம் பொருந்திய விடம். நேர்ந்ததோர் - பொருந்தியதோர். கோலமுண்ட - அழகைக் கொண்ட குணத்தால் நிறைந்தது - நற்குணங்களால் நிரம்பிய அம்பிகை. ஓர் பாலுமுண்டு - இடப்பாகத்தில் எழுந்தருளியுள்ளது. என்னிடை - என்னிடத்தே. மால் - மயக்கம். இறை என்பதை இறைவனே என்றும், சிறிது என்றும் பொருள் கூறலாம். |
|