|
| பாடல் எண் :1422 | மந்த மாக வளர்பிறை சூடியோர் சந்த மாகத் திருச்சடை சாத்துவான் பந்த மாயின தீர்க்கும் பழனத்தான் எந்தை தாய்தந்தை யெம்பெரு மானுமே. |
| | 6 | பொ-ரை: பெருமை தரும்படியாக வளர்பிறையைச் சூடி ஒரு சந்தமாகத் திருச்சடை சாத்துவானும், பந்தமாயினவற்றைத் தீர்ப்பானும் ஆகிய திருப்பழனத்து இறைவன் எந்தையும், தாயும், தந்தையும், எம்பெருமானும் ஆவன். கு-ரை: மந்தமாக - மெதுவாக. சந்தம் - மாலை. பந்தம் - வினை; நம்மைச் சூழ்ந்த பாசம். எந்தை - என் உண்மையான உயிர்த்தந்தை. தாய் தந்தை - உடலைப்பெற்று வளர்த்த தாயும் தந்தையுமாவன். எம்பெருமான் - எங்கள் தலைவன். |
|