|  |  | பாடல் எண் :1442 |  | | விடுத்த மால்வரை விண்ணுற வானையார் தொடுத்த மால்வரை தூயதொ ரானையார்
 கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
 கடுத்த வானைகண் டீர்கட வூரரே.
 | 
 |  | 6 |  | பொ-ரை:  விடுத்த பெரியமலையை விண்ணுற நிமிர்க்கும் ஆனையார்; தொடுத்த பெரியமலை தூய்மையாக உடைய ஆனையார்; சினந்துவந்த காலனைக் காய்ந்த ஒப்பற்ற கடவூர்த்தலத்திறைவர் சினத்தலுற்ற ஆனைபோல்வர்; காண்பீர்களாக. கு-ரை:  விண்ணுற விடுத்த - ஆகாயத்தை அளாவச் செய்த. மால்வரை - பெரியமலை; கயிலாயம். மால்வரை தொடுத்த - பெரிய இமயமலையை வில்லாக வளைத்த. கடுத்த - கோபித்த.
 | 
 |