|  |  | பாடல் எண் :1478 |  | | விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக் கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
 பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
 தொழுது செல்பவர் தமவினை தூளியே.
 | 
 |  | 3 |  | பொ-ரை:  நிணம் பொருந்திய சூலத்தையும், வெண் மழுவாளையும் படைக்கலமாக உடையவனும், பேய்களும் தூங்குகின்ற நள்ளிருளில் சுடுகாட்டில் ஆடலை உடையவனும், பைஞ்ஞீலியில் உறையும் பரமனும் ஆகிய பெருமானைப் பழுது ஒன்றும் இன்றித் தொழுது செல்பவர் வினைகள் பொடியாகும். கு-ரை: விழுது - நெய் எனலுமாம். மழுவாள்படை - ஒளி பொருந்திய மழுவாயுதம். கழுது - பேய். துஞ்சு - உறங்கும். இருள் - ஊழி. பழுது - குற்றம். தூளி - பொடியாம்.
 | 
 |