|
பாடல் எண் :1493 | நட்ட மாடிய நம்பனை நாள்தொறும் இட்டத் தாலினி தாக நினைமினோ வட்ட வார்முலை யாளுமை பங்கனார் சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே. |
| 8 | பொ-ரை: வட்டவடிவமாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும், உயர்ந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவேட்களத்தையும், அங்கு நட்டமாடிய நம்பனையும், நாள்தோறும் விருப்பத்துடன் இனிது நினைப்பீராக. கு-ரை: இட்டத்தால் - விருப்பத்தோடு. வட்டவார் முலையாள் - வட்டவடிவமான கச்சணிந்த தனங்கள். |
|