|  |  | பாடல் எண் :1510 |  | | குராமன் னுங்குழ லாளொரு கூறனார் அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர்
 இராம னும்வழி பாடுசெய் யீசனை
 நிராம யன்தனை நாளும் நினைமினே.
 | 
 |  | 5 |  | பொ-ரை:  குரவமலர்கள் நிலைபெற்ற கூந்தலை உடைய உமா தேவியை ஒரு கூற்றில் உடையவனும், பாம்பு நிலைபெற்ற சடையனும், திருவாமாத்தூரில் இராமனால் வழிபாடு செய்யப் பெற்ற ஈசனும், நிராமயனும் ஆகிய பெருமானை நாள்தோறும் நினைப்பீர்களாக. கு-ரை:  குராமன்னும் - குராமலர் பொருந்திய. குழலாள் - கூந்தலை உடையவளாகிய  பார்வதி. ஒரு கூறனார் - இடப்பாகத்தே உடையவர். அரா - பாம்பு. நிராமயன் - நோயற்றவன்; பசுத்துவமில்லாதவன். இராமன் வழிபட்ட தலவரலாற்றை உட்கொண்டது.
 | 
 |