|  |  | பாடல் எண் :1523 |  | | ஒன்று தானறி யாருல கத்தவர் நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
 துன்று வார்பொழில் தோணி புரவர்தம்
 கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே.
 | 
 |  | 7 |  | பொ-ரை:   தலைவிக்குற்ற நோயின்  காரணம் நேறொன்றாதலை இவ்வுலகத்தவர் அறியார்; நின்று சொல்லி அவளுக்கு நிகழ்ந்த நினைப்பு இல்லாதவர்கள்; நெருங்கிய நீண்டுயர்ந்த பொழில்களை உடைய தோணிபுரத்து இறைவருடைய கொன்றை மலரைச் சூட விழையும் குறிப்பே அந்நோய்க்குக் காரணமாகும். கு-ரை: 	உலகத்தவர்-உலகில் உள்ள மக்கள். ஒன்று தான் அறியார் - நிகழ்ந்ததொன்றையும் அறியமாட்டார்கள். நின்று சொல்லி - காதல்மயக்கம் கொண்ட அப்பெண்ணிடம் சென்று நின்று அறிவுரை சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர் -அவளுக்கு எதனால் இது நிகழ்ந்தது என்ற நினைப்பிலராயினர். அவர் சூட்டச் சூடிக்கொண்டு அவர்க்கு மனைவியாகும் காமக் குறிப்பால் அங்ஙனம் ஒழகுகின்றாள் என் மகள். இஃது அறியாதவராய் அறிவுரை சொல்லி நிற்கின்றனரே அவர் ஒன்றுமறியாதவர் போலும் எனச் செவிலி உலகவரை நோக்கி இரங்கியது.
 | 
 |