|  |  | பாடல் எண் :1550 |  | | கறைகொள் கண்டத்தெண் தோளிறை முக்கணன் மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்
 உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
 முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே.
 | 
 |  | 3 |  | பொ-ரை;   திருநீலகண்டனும், எட்டுத்தோள்களை உடைய இறைவனும், முக்கண்ணினனும், வேதம் ஓதும் நாவினனும், தேவர்களுக்கெல்லாம் ஆதியானவனும் ஆகிய பெருமான் உறைகின்ற பூம்பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்தை நெறியினாற் சென்று முந்துறத்தொழுவோமாக. கு-ரை;  ஆதி- தலைவன். முறையால்-வழிபாட்டு முறையினால். தொழுதும் வணங்குவோம். முந்தி - விரைந்து.
 | 
 |