|  |  | பாடல் எண் :1559 |  | | கொள்ளி வெந்தழல் லீசிநின் றாடுவார் ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
 வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
 தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
 | 
 |  | 2 |  | பொ-ரை:  நெஞ்சே! கொள்ளியாகிய வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும், உமைபங்கரும், வெள்ளிய திருவெண்ணீற்றினரும், அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும், விடையேறிய தெளிவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக. கு-ரை:  கொள்ளி வெந்தழல் - கொள்ளிக் கட்டையில் பற்றிய வெவ்விய நெருப்பு. வீசி - சுழற்றி ஆடுவார்; அனலேந்தியாடுவார் என்பதாம். ஒளி பொருந்திய கணம் - பூதகணங்கள், வெள்ளியன் - திருநீற்றுப்பூச்சால் வெண்மை நிறமுடையவன். கரியன் - அகோரமுகத்தை உடையவன். பசு - இங்கு எருது. தெள்ளியன் - தெளித்த அறிவினன்.
 | 
 |