|  |  | பாடல் எண் :1587 |  | | மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை நாகந் தோய்ந்த அரையினர் நல்லியல்
 போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
 பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே.
 | 
 |  | 9 |  | பொ-ரை:   திருப்பலைத்துறையல், மேகமண்டலத்தைத் தோய்கின்ற பிறையினைச் சூடுவர்: மேகலையாக நாகம் தோய்ந்த அரையினை உடையவர்; நல்லியலுடைய போகம் தோய்தற்குரிய இரண்டு தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகம் தோய்ந்தவர். கு-ரை:  மேகலை-பெண்கள் இடையில் அணியும் அணிகலன். மேகலை கூறியது மாதொரு வறராதல் பற்றி.
 | 
 |