| 
			 |  பாடல் எண் :1604 |   பல்லா ரும்பல தேவர் பணிபவர் 	 நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன் 	 வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டம் 	 கல்லே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. |  
  |  | 5 |  பொ-ரை:  பலவகைப்பட்ட தேவர்களாலும் பணியப்படுபவரும், நல்லார்களாலும் விரும்பிப் பரவப்படுபவரும், வில்லால் மூவெயில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கல்லேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை:  பல்லார் - பலமக்கள். தேவர் என்புழி உம்மை விரிக்க. நல்லாரும் - நல்லவர்களும். நயந்து - விரும்பி. |  
  |