|  |  | பாடல் எண் :1605 |  | | வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக் கொண்டான் கோல மதியோ டரவமும்
 விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டம்
 கண்டா லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
 | 
 |  | 6 |  | பொ-ரை:  வண்டுகள் பொருந்திய கொன்றையும், ஊமத்தமலரும், பிறையும், அரவமும் அழகு வளரும் தம் சடையிற் கொண்டவரும், பகைவரது மும்மதில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கண்டபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை:  வண்டார்-வண்டுகள் பொருந்திய. மத்தம்-ஊமத்தம். வளர்சடைக் கொண்டான். கோலமதியோடு அரவமும் கொண்டான் என்க. விண்டார்-பகைவர்.
 | 
 |