|
பாடல் எண் :1613 | நீள மாநினைந் தெண்மல ரிட்டவர் கோள வல்வினை யுங்குறை விப்பரால் வாள மாலிழி யுங்கெடி லக்கரை வேளி சூழ்ந்தழ காயவீ ரட்டரே. |
| 2 | பொ-ரை: வட்டமாகவும், பெரிதாகவும் ஓடுகின்ற கெடில நதிக்கரை வேலிபோல் சூழ்ந்த வீரட்டத்திறைவர், தம்மை இடைவிடாது நினைந்து எண்வகை மலர்களால் வழிபடுபவர்களின் கொடிய வல்வினையை நீக்குவர். கு-ரை: நீளமா-இடைவிடாது. கோளவல்வினையும்-கொடுமை பொருந்திய வலிய வினைகளையும். ஆல்-அசை. வாளம்-வட்டமாக. மால் இழியும்-பெரிதாக ஓடுகின்ற. வேலி என்பது வேளி எனத் திரிந்தது, |
|