பாடல் எண் :1616
தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன்
தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேன லானை யுரித்தவீ ரட்டரே.

5
பொ-ரை: மீன்களை உடைய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக் கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும், ஆனை உரித்தவருமாகிய பெருமான், தேன் உடைய அழகிய போதுகளாகிய எட்டுவகைப்பட்ட மணமலர்களை இட்டு வணங்குவார் வினைகளைத் தீர்ப்பவர் ஆவர்.
கு-ரை: தேனப்போதுகள்-தேன் பொருந்திய பூக்கள். தான்-தானே. அப்போது-அம்மலர்களை. இடுவார்-அருச்சிப்பார். மீனத்தண்புனல்-மீன்கள் நிறைந்த குளிர்ந்த புனல். வேனலானை-கோபமுடையானை. உரித்த-தோலை உரித்தெடுத்த.