|  |  | பாடல் எண் :1622 |  | | வீறு தானுடை வெற்பன் மடந்தையோர் கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
 நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்
 காறு சூடலும் அம்ம அழகிதே.
 | 
 |  | 1 |  | பொ-ரை:  மணம் வீசுகின்ற பூம்பொழில்களை உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள நம் இறைவர், பிறிதொன்றற்கில்லாத பெருஞ்சிறப்புடைய திருக்கயிலாயத்தை உடையவர். உமையம்மையை ஒருபங்கில் உடையவர்; வளைந்த பிறை சூடியவர். ஆயினும் கங்கையாற்றினைச் சடையிற் சூடல் மிக்க அழகும் வியப்பும் உடையதே. கு-ரை:  வீறுதானுடைய வெற்பன்-பெருமை பொருந்திய  மலையரையன். கூன் பிறை - வறைந்த பிறை. நாறு - மணம் கமழும். அம்ம -வியப்புமொழி; மிக என்னும் பொருட்டு.
 | 
 |