|  |  | பாடல் எண் :1629 |  | | என்பு பூண்டெரு தேறி யிளம்பிறை மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
 நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
 அன்ப னுக்கது வம்ம வழகிதே.
 | 
 |  | 8 |  | பொ-ரை:  எலும்புகளைப் பூண்டு, எருதின்மேல் ஏறி, இளம் பிறையினை மின்னலை முறுக்கினாலொத்த ஒளிச்சடையின் மேல் விளங்கச் சூடி, நல்ல பகலிலும் பலிதேர்வராயினும், திருநாரையூரில் உள்ள அன்பு வடிவாய சிவபெருமானுக்கு அது மிக்க வியப்பும் அழகும் உடையதே. கு-ரை:  மின்புரிந்த-மின்னலைப்போல் முறுக்கி விளங்கிய. நன்பகல்- நல்ல பகற்போது. பலிதேரினும்-உணவு இரந்தாலும். அன்பன்-அன்பே வடிவமாயவன்.
 | 
 |