|  |  | பாடல் எண் :1634 |  | | வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர் கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக்
 கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய
 அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
 | 
 |  | 3 |  | பொ-ரை:  வெள்ளிய அலைகளை உடைய கடல் விடம் உண்ட ஒப்பற்ற திருநீலகண்டனும் நெஞ்சு கலந்து பொழுமவர்க்கு அன்பே வடிவாய் அருள்புரிபவனும், மேகங்கள் பொருந்துகின்ற அழகிய சோலைகளை உடைய கோளிலியில் விரும்பி உறையும் தேவனுமாகிய பெருமானைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை. கு-ரை:  வெண்டிரைப்பரவை -வெள்ளிய அலைகளோடு கூடிய கடல். கண்டனை- கழுத்தை உடையவனை கலந்தார் தமக்கு- அன்பால் தம்மோடு மனமொத்தவர்க்கு("கலந்த அன்பாகி" தி.8 திருவாசகம்.) கொண்டலம் பொழில்-மேகங்கள் சூழ்ந்த பொழில். அண்டனை-எல்லா உலகமுமாயவனை.
 | 
 |