|  |  | பாடல் எண் :1659 |  | | ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
 பாத னைப்பழை யாறை வடதளி
 நாத னைத்தொழ நம்வினை நாசமே.
 | 
 |  | 8 |  | பொ-ரை:  அடியார் இனத்தே ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும், வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும் ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம். கு-ரை:  ஓதினத்து எழுத்தஞ்சும்- ஓதவேண்டிய திருவைந்தெழுத்தையும். உணரா-ஓதியுணராத. வேதினைப்படுத்தானை- துன்பம் செய்தவனை. வெங்கூற்று -கொடிய கூற்றை. உதை- உதைத்த. பாதன்-திருவடிகளையுடையவன்.
 | 
 |