|  |  | பாடல் எண் :1670 |  | | வேட னாய்விச யன்னொடும் எய்துவெம் காடு நீடுகந் தாடிய கண்ணுதல்
 மாட நீடுய ருந்திரு மாற்பேறு
 பாடு வார்பெறு வார்பர லோகமே.
 | 
 |  | 9 |  | பொ-ரை:  அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து, வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும், மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள். கு-ரை:  விசயன் - அருச்சுனன். வெம்காடு - இடுகாடு. நீடுஉகந்து - பெரிதும் விரும்பி. பரலோகம் - மேலான உலகம்.
 
 | 
 |