|  |  | பாடல் எண் :1710 |  | | கடுத்த தோரரக் கன்கயி லைம்மலை எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல்
 அடுத்த லும்மவ னின்னிசை கேட்டருள்
 கொடுத்த வன்குரங் காடு துறையனே.
 | 
 |  | 11 |  | பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், சினந்த தேரை உடைய இராவணனது, திருக்கயிலையை எடுக்கலுற்ற தோள்களும் தலையும் இற்று, அவன் அலறும்படியாகத் திருவிரலை அடுத்தவன்; பின் அவன் இன்னிசை கேட்டு அருள்கொடுத்தவன் ஆவன். கு-ரை: கடுத்த - விரைவான். தலையிற்றலற -தலை நெரிந்தலற. விரல் அடுத்தலும் -விரல் ஊன்றலும்.
 | 
 |