|
பாடல் எண் :1747 | நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை ஆறு சூடும் அடிக ளுறைபதி மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியம் தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே. |
| 5 | பொ-ரை: திருநீறு பூசி நிமிர்ந்த சடையின்மேல் பிறையும் கங்கையும் சூடும் பெருமான் உறையும் பதியாகியதும், களைகளாகிய பிரம்பு முதலியவை ஒருங்கும் வயல் வளமுடைய திருவாஞ்சியத்தைத் தெளிந்து வாழ்பவர்க்குச் செல்வம் பெருகும். கு-ரை: மாறுதான் ஒருங்கும் வயல் - நெற் பயிர்களுக்கு மாறாகிய களைகள் அழிந்து குறையும் வயல்கள். தேறி - தெளிந்து. |
|