|
| பாடல் எண் :1826 | ஆல நீழ லமர்ந்த அழகனார் கால னையுதை கொண்ட கருத்தனார் கோல மஞ்ஞைக ளாலுங் குரக்குக்காப் பால ருக்கருள் செய்வர் பரிவொடே. |
| | 7 | பொ-ரை: கல்லால நிழற்கீழ் அமர்ந்த அழகரும், காலனை உதைத்தலைக் கொண்ட கருத்தருமாகிய பெருமான் உறைகின்ற அழகு மிக்க மயில்கள் ஆர்க்கின்ற குரக்குக்காவின்பால் வாழ்வோர்க்குப் பரிவொடு அருள்செய்வர். கு-ரை: ஆலநீழல் - கல்லாலின் நிழலில். காலனை - இயமனை. கருத்தனார் - கருத்தாயிருப்பவர். கோலமஞ்ஞைகள் - அழகிய மயிலினங்கள். ஆலும் - ஆடும். குரக்குக்காப்பாலர் - குரக்குக்காவை அடைந்தவர். பரிவோடு - இரக்கத்தோடு. |
|