|
பாடல் எண் :1854 | நாடி நாரணன் நான்முகன் வானவர் தேடி யேசற வுந்தெரி யாததோர் கோடி காவனைக் கூறாத நாளெலாம் பாடி காவலிற் பட்டுக் கழியுமே. |
| 6 | பொ-ரை: திருமாலும் நான்முகனும் தேவர்களும் ஆராயமுற்பட்டுத் தேடித் துயர் உறவும் தெரியாத இயல்பை உடைய ஒப்பற்ற கோடிகாவுறையும் இறைவனைக் கூறாத நாட்களெல்லாம் ஊர்க்காவலிற்பட்டுக் கழியும். கு-ரை: நாடி - ஆராய்ந்து. வானவர் - தேவர். ஏசவும் - வருத்தவும். பாடிகாவல் - அரசநீதி. பட்டு - பொருந்தி. கழியும் - நீங்கும். |
|