|
| பாடல் எண் :1868 | சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை பங்க னாரடி பாவியேன் நானுய்ய அங்க ணனெந்தை யன்பிலா லந்துறைச் செங்க ணாரடிச் சேரவும் வல்லனே. |
| | 4 | பொ-ரை: உள்ளதும் ஐயம்; சாவதேமெய்; ஆதலால் உமை பங்கரும், அழகிய கண்ணை உடையவரும், எந்தையும், அன்பிலாலந் துறையில் சிவந்த கண்ணை உடையவருமாகிய பெருமான் அடிகளைப் பாவியேன் நான் உய்யச் சேரவும் வல்லனே!. கு-ரை: உள்ளது சங்கை - இவ்வுலக வாழ்வில் இருப்பது ஐயம். சாவது மெய் - இறப்பது நிச்சயம். மெய் - உண்மையே. உமை பங்கனார் - பார்வதி சமேதராய பெருமான். அடி - திருவடிகளை. பாவியேன் - சிந்தியேன். அங்கணன் - அழகிய அருட்கண்ணன். எந்தை - எங்கள் தந்தை. செங்கணார் - சிவந்த கண்களை உடைய. வல்லனே - வல்லனோ என்க.
|
|