|
பாடல் எண் :1879 | நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் இருக்கொ டும்பணிந் தேத்த விருந்தவன் திருக்கொ டும்முடி யென்றலுந் தீவினைக் கருக்கெ டும்மிது கைகண்ட யோகமே. |
| 5 | பொ-ரை: இராவணனது அம்முடிகளை நெருக்கி, புகழை உடைய வானவர் நின்று இருக்கு வேதம் உரைத்துப் பணிந்து ஏத்த இருந்தவனுடைய "திருக்கொடுமுடி" என்றலும் தீவினையின் கருக்கெடும்; இது கைகண்ட யோக நெறியாகும். கு-ரை: அம்முடி நெருக்கிநின்று - கூட்டமாய் ஒருவர் முடியோடு மற்றொருவர் நெருக்கிக்கொண்டு நின்று. இசை-பொருந்திய இருக்குவேதமொழி. கரு-பிறவி. |
|