|
பாடல் எண் :1929 | நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல் ஊர்ப ரந்த உரகம் அணிபவர் சீர்ப ரந்த திருமணஞ் சேரியார் ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே. |
| 6 | பொ-ரை: கங்கைநீர் பரவி நிமிர்ந்து விளங்கும் சடையின் மேல் ஊர்ந்து பரவுகின்ற பாம்பினை அணிந்தவராகிய பெருமை பரவிய திருமணஞ்சேரி இறைவர் எழில் பெருகி விளங்கும் சூலப் படையினை உடையவர். கு-ரை: நீர் பரந்த - கங்கைநீர் பரவிய. நிமிர் புன்சடை - நிமிர்ந்த மெல்லிய சடை. "நீர் பரந்த நிமிர்புன்சடை மேலோர் நிலாவெண்மதி சூடி" (தி.1 ப.1 பா.3.) ஊர் பரந்த - ஊரின்கண் பரவி வந்த. உரகம் - பாம்பு. ஏர்பரந்த அங்கு - அழகு பெருகிய அவ்விடத்து. இலங்கு - விளங்கு. சூலத்தர் - சூலத்தை உடையவராய் எழுந்தருளியுள்ளார். |
|